தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 July 2018 4:00 AM IST (Updated: 17 July 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கரூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்,

கரூர் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கரூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் காமராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் ஜெயராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட கலந்தாய்வு மூலம் அனைத்து மாவட்ட காலிப்பணியிடங்களையும் முறைகேடற்ற, வெளிப்படையான முறையில் 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் உள்பட ஆசிரிய- ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story