ஜவ்வாதுமலையில் 2 கிலோமீட்டர்தூரம் ரோட்டில் நடந்து சென்ற ஒற்றை யானை முதுமலை காட்டில்விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஜவ்வாதுமலையில் சுற்றித்திரியும் ஒற்றை ஆண் யானை 2 கிலோமீட்டர் தூரம் ரோட்டிலேயே நடந்து சென்றது. இந்த யானையை பிடித்து முதுமலை காட்டில் விடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலசபாக்கம்,
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு இயற்கை தந்த கொடையாக விளங்குவது ஜவ்வாதுமலை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்குதொடர்ச்சி மலையிலிருந்து இடம் பெயர்ந்த யானைகள் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஜவ்வாதுமலைக்குள் புகுந்தது. இவ்வாறு 12 யானைகள் வந்தன.
அதன்பின்னர் பெங்களூரு- சென்னை 4 வழிச்சாலையில் போக்குவரத்து அதிகரித்ததால் ஆம்பூர், பச்சகுப்பம் ரெயில்வே கேட் அருகில் ஒடுகத்தூர் காட்டுப்பகுதியை விட்டு சாலையை கடக்க முடியாமல் 12 யானைகள் ஜவ்வாது மலையிலேயே முகாமிட்டன. மேலும் உணவு மற்றும் தண்ணீருக்காக மலை கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. அப்போது யானையை விரட்ட முயன்ற பலர் பலியானார்கள். மேலும் ஏராளமான பயிர்களை அந்த யானைகள் நாசப்படுத்தியதோடு, குடிசை வீடுகளையும் சேதப்படுத்தியது.
இந்த 12 யானைகளில் 6 யானைகள் பிரசவத்தின்போதும், மின்வேலியில் சிக்கியும் பலியாகி விட்டன. மீதம் உள்ள 6 யானைகளை பிடித்து முதுமலை காட்டில் விட திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டன. அப்போது ஒரு ஆண் யானை மட்டும் கூட்டத்தை விட்டு பிரிந்து தனியாக சென்றுவிட்டது. கடந்த 6 ஆண்டுகளாக தன்னந்தனியாக அந்த யானை சுற்றி வருகிறது.
யாரையும் துன்புறுத்தாமல் எந்த சேதத்தையும் ஏற்படுத்தாமல் காட்டில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டுவிட்டு அந்த யானை அமைதியாக சுற்றிக்கொண்டு இருக்கிறது. நேற்றுமுன்தினம் காலை இந்த யானை போளூர்-ஜமுனாமரத்தூர் சாலையில் பட்டறைக்காடு அருகில் உள்ள காட்டுப்பகுதி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மெயின் ரோட்டிலேயே நடந்து சென்றது.
அப்போது அந்த வழியாக வந்தவர்கள், யானையை பார்த்ததும் மிரண்டுபோய் வாகனங்களை அதே இடத்தில் நிறுத்திவிட்டனர். மேலும் அக்கம்பக்கம் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், சிறுவர்கள் என அனைவரும் யானையின் பின்பக்கமாக கூச்சலிட்டபடியே சென்றனர்.
இதை எதையும் பெரிது படுத்தாமலும், கோபப்படாமலும் அந்த யானை மிகவும் அமைதியாக சென்றது. இதனால் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த ஆண் யானைக்கு வயது முதிர்ந்த நிலையில் ஒரு கண் சரியாக தெரியவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 6 ஆண்டுகளாக இந்த யானையால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதன் காரணமாக அந்த யானையை பிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படவில்லை. இருப்பினும் யானையை பிடித்து முதுமலை காட்டில் விட திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story