தண்டராம்பட்டு அருகே நாட்டுத்துப்பாக்கியுடன் திரிந்த 2 பேர் கைது


தண்டராம்பட்டு அருகே நாட்டுத்துப்பாக்கியுடன் திரிந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 July 2018 4:15 AM IST (Updated: 17 July 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

தண்டராம்பட்டை அடுத்த கீழ்வலசை வனப்பகுதியில் பீமாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமன் (வயது 48), சுப்பிரமணி (46) வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினர், ராமன், சுப்பிரமணி ஆகிய 2 பேரையும் கைது செய்து செங்கம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தண்டராம்பட்டு,

தண்டராம்பட்டை அடுத்த கீழ்வலசை வனப்பகுதியில் தானிப்பாடி வன அலுவலர் பாலு தலைமையில் வனவர்கள் முருகன், சம்பத், முனுசாமி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் திடீரென துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் சத்தம் கேட்ட பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு 2 நபர்கள் நாட்டுத்துப்பாக்கியுடன் நடமாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து விசாரித்த போது பீமாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமன் (வயது 48), சுப்பிரமணி (46) என்பதும், வனப்பகுதியில் மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினர், ராமன், சுப்பிரமணி ஆகிய 2 பேரையும் கைது செய்து செங்கம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.



Next Story