ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 40 சதவீதம் ரசாயனம் வெளியேற்றம் கலெக்டர் தகவல்


ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 40 சதவீதம் ரசாயனம் வெளியேற்றம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 July 2018 4:15 AM IST (Updated: 17 July 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 40 சதவீதம் ரசாயன பொருட்கள் வெளியேற்றப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 40 சதவீதம் ரசாயன பொருட்கள் வெளியேற்றப்பட்டு உள்ளன. இந்த பணிகளை ஆலை நிர்வாகமே செய்து வருகிறது. அங்கு உள்ள பெட்ரோலிய பொருட்கள் அந்த நிறுவனத்தின் துணை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

திட்டமிட்டப்படி 30 நாட்களுக்குள் இந்த பணி நிறைவு பெறும். இந்த பணிகளை உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். ஆலையில் இருந்து தாமிர தாதுவை வெளியேற்ற சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் ஆலை வளாகத்தில் உள்ள மரங்களை பராமரிக்க மாநகராட்சி சார்பில் 2 டேங்கர் லாரிகளில் தண்ணீர் வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக மின் இணைப்பு வழங்கப்படவில்லை. டீசல் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவதற்கான ஆவணங்கள் அனைத்தும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அரசாணை வழங்கப்படும். கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரும்பினால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உதவி அளிக்கப்படும். சிலர் படகுகள், ஆட்டோக்கள் தேவை என்றும், கல்வி உதவி தொகை கேட்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி தூத்துக்குடி கலவரத்தில் காயம் அடைந்த ஒரு நபருக்கு தனியார் நிறுவன நிதியுதவி மூலம் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆட்டோ வழங்கி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story