பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 July 2018 4:00 AM IST (Updated: 17 July 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

நாகப்பட்டினம்,

நாகையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க வட்ட தலைவர் காதர்மொய்தீன் தலைமை தாங்கினார். துணை தலைவர் குணசேகரன் வரவேற்றார். வட்ட செயலாளர் மாரிமுத்து வேலை அறிக்கையினையும், வட்ட பொருளாளர் பாபுராஜ் நிதிநிலை அறிக்கையினையும் வாசித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட தலைவர் நடராசன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆசைத்தம்பி, புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் அந்துவன்சேரல், நகராட்சி ஊழியர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

1.1.2016 முதல் வழங்க வேண்டிய 21 மாத ஓய்வூதிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். பாகுபாடின்றி அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். மருத்துவப்படி ரூ.ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில செயலாளர் ராணி, அரசு ஊழியர் சங்க நாகை வட்ட செயலாளர் தமிழ்வாணன், போக்குவரத்து ஊழியர் சம்மேளன தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க வட்ட இணை செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார். 

Next Story