நவிமும்பை அருகே கார் ஆற்றில் பாய்ந்தது; வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் மீட்பு


நவிமும்பை அருகே கார் ஆற்றில் பாய்ந்தது; வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் மீட்பு
x
தினத்தந்தி 17 July 2018 3:46 AM IST (Updated: 17 July 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

நவிமும்பை அருகே கார் ஆற்றில் பாய்ந்தது. இதில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 4 பேரை உள்ளூர் மக்கள் மீட்டனர்.

நவிமும்பை,

ராய்காட் பகுதியை சேர்ந்தவர் அஸ்ரப் சகில் சேக் (வயது37). இவரது மனைவி ஹமீதா(33). அஸ்ரப் சகில் சேக் நேற்று தனது மனைவி உள்பட 4 பேருடன் நவிமும்பை தலோஜா பகுதியில் உள்ள ஆற்றுப்பாலத்தில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து ஆற்றில் பாய்ந்தது. இதில் கார் ஆற்றில் கரை புரண்டோடிய வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு அங்கிருந்த பாறை ஒன்றில் சிக்கியது. இதனால் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் காரின் மீது ஏறி நின்று உதவி கேட்டு அபய குரல் எழுப்பினர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் காருடன் பாறையில் சிக்கி இருந்த 4 பேரையும் சாதுர்யமாக செயல்பட்டு மீட்டனர்.

கார் ஆற்றில் உள்ள பாறையில் சிக்கியதால் அவர்கள் 4 பேரும் உயிர்தப்பினர். இல்லை எனில் ஆற்றில் கரை புரண்டோடும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இருப்பார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story