பால் உற்பத்தியாளர்கள் போராடும் வழி சரியல்ல முதல்-மந்திரி பட்னாவிஸ் பேட்டி
பால் உற்பத்தியாளர்கள் தற்போது போராடும் வழி சரியல்ல. பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
மும்பை,
பால் கொள்முதல் விலையை ரூ.5 வரை அதிகரிக்கவேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு மானியத்தை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மராட்டியத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பல இடங்களில் பால் டேங்கர் லாரிகள் சிறை பிடிக்கப்பட்டன. மேலும் பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.
இந்த பிரச்சினை நேற்று நாக்பூரில் நடந்த சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. சட்டசபை ெதாடங்கியதும் இந்த பிரச்சினையை கையில் எடுத்து எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் பேசியதாவது:-
தற்போதைய அரசு விவசாயிகள் எழுப்பும் கோரிக்கைகளுக்கு செவிகொடுக்க மறுக்கிறது. ஆனால் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். அரசின் அலட்சிய போக்கால் பால் விவசாயிகளின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டே, மறுபுறம் பா.ஜனதா அரசில் தொடர்ந்துகொண்டு சிவசேனா நாடகமாடி வருகிறது.
சிவசேனா இந்த பிரச்சினையை தீவிரமாக கருதினால் உடனடியாக அரசில் இருந்து வெளியேற வேண்டும். பா.ஜனதா, சிவசேனா இரு கட்சிகளும் விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் பதில் அளித்து கூறுகையில், “பால் கூட்டுறவு அமைப்புகள், பால் சேகரிக்கும் வேலையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இது பால் விவசாயிகளுக்கு ெபரும் இழப்பை ஏற்படுத்தும். விவசாயிகள் ஒருபோதும் தாங்கள் உற்பத்தி செய்த பாலை சாலையில் கொட்டமாட்டார்கள், ஆனால் அமைப்புகள் தான் அதை செய்கின்றன. இதுதான் விவசாயிகளுக்கு எதிரான போராட்டம்.
பாலை சேகரித்து நகரங்களில் வினியோகம் செய்யும் பணி தொடரும். இந்த அரசு அதற்கு எந்த இடையூறும் செய்ய அனுமதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் பால் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்று வலியுறுத்தி, சட்டசபை சபாநாயகர் இருக்கை முன்பு சென்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
அப்போது சபாநாயகர் இது குறித்து முதல்-மந்திரியுடன் பேசி நாளை (இன்று) கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்வதாகவும், அங்கு இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கலாம் எனவும் கூறினார்.
பேச்சுவார்த்தைக்கு எங்கள் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளது. அரசு எந்த ஒரு பிரச்சினையிலும் அகந்தையான கண்ணோட்டத்துடன் நடந்து கொண்டதில்லை. ஆனால் தற்போது பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் சென்றுகொண்டிருக்கும் வழி சரியானதாக தெரியவில்லை.
தற்போதைக்கு வெறும் 40 சதவீதம் பால் உற்பத்தியாளர்கள் மட்டுமே நிறுவனத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். மீதம் உள்ள 60 சதவீதத்தினர் பதிவு செய்யவில்லை. எனவே நேரடியாக மானியம் வழங்குவது பல்வேறு குளறுபடிகளுக்கு வழிவகை வகுக்கும். இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
பால் கொள்முதல் விலையை ரூ.5 வரை அதிகரிக்கவேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு மானியத்தை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மராட்டியத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பல இடங்களில் பால் டேங்கர் லாரிகள் சிறை பிடிக்கப்பட்டன. மேலும் பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.
இந்த பிரச்சினை நேற்று நாக்பூரில் நடந்த சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. சட்டசபை ெதாடங்கியதும் இந்த பிரச்சினையை கையில் எடுத்து எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் பேசியதாவது:-
தற்போதைய அரசு விவசாயிகள் எழுப்பும் கோரிக்கைகளுக்கு செவிகொடுக்க மறுக்கிறது. ஆனால் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். அரசின் அலட்சிய போக்கால் பால் விவசாயிகளின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டே, மறுபுறம் பா.ஜனதா அரசில் தொடர்ந்துகொண்டு சிவசேனா நாடகமாடி வருகிறது.
சிவசேனா இந்த பிரச்சினையை தீவிரமாக கருதினால் உடனடியாக அரசில் இருந்து வெளியேற வேண்டும். பா.ஜனதா, சிவசேனா இரு கட்சிகளும் விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் பதில் அளித்து கூறுகையில், “பால் கூட்டுறவு அமைப்புகள், பால் சேகரிக்கும் வேலையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இது பால் விவசாயிகளுக்கு ெபரும் இழப்பை ஏற்படுத்தும். விவசாயிகள் ஒருபோதும் தாங்கள் உற்பத்தி செய்த பாலை சாலையில் கொட்டமாட்டார்கள், ஆனால் அமைப்புகள் தான் அதை செய்கின்றன. இதுதான் விவசாயிகளுக்கு எதிரான போராட்டம்.
பாலை சேகரித்து நகரங்களில் வினியோகம் செய்யும் பணி தொடரும். இந்த அரசு அதற்கு எந்த இடையூறும் செய்ய அனுமதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் சிவசேனா நாடகமாடுவதாகக் கூறிய எதிர்க்கட்சி தலைவருக்கு மந்திரி ரவீந்திர வாய்கர் பதிலடி கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில், “மஞ்சள் காமாலைகாரனுக்கு அனைத்தும் மஞ்சளாகவே தெரியுமாம். எதிர்க்கட்சிகள் சிவசேனாவை அனைத்து பிரச்சினைகளிலும் குற்றம் சாட்டுவது அப்படிதான் உள்ளது” என்றார்.
இந்த நிலையில் பால் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்று வலியுறுத்தி, சட்டசபை சபாநாயகர் இருக்கை முன்பு சென்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
அப்போது சபாநாயகர் இது குறித்து முதல்-மந்திரியுடன் பேசி நாளை (இன்று) கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்வதாகவும், அங்கு இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கலாம் எனவும் கூறினார்.
ஆனால் அவரின் பதிலில் திருப்தி அடையாத எதிர்க்கட்சிகள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இந்த நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பால் விவசாயிகள் போராட்டம் குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்போதைக்கு வெறும் 40 சதவீதம் பால் உற்பத்தியாளர்கள் மட்டுமே நிறுவனத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். மீதம் உள்ள 60 சதவீதத்தினர் பதிவு செய்யவில்லை. எனவே நேரடியாக மானியம் வழங்குவது பல்வேறு குளறுபடிகளுக்கு வழிவகை வகுக்கும். இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
Related Tags :
Next Story