தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்
தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பரக்காணி தடுப்பணை திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகர்கோவில்,
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் விளவங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் தாமிரபரணி ஆறு குழித்துறை, மங்காடு, கணபதியான்கடவு வழியாக தேங்காப்பட்டணம்– இரையுமன்துறை மீனவ கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதி வழியாக அரபிக்கடலில் கலக்கிறது. பொழிமுக விளிம்பு பகுதியில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிக்கு ஆழப்படுத்துவதின் விளைவாகவும், தாமிரபரணி ஆற்றின் அடிப்பகுதி வரை மணல் அள்ளும் காரணத்தினாலும் கடல்நீர் உள்புகுந்து ஆற்றில் கிட்டத்தட்ட 10 கி.மீ. தூரம் உப்பு நீராக மாறி உள்ளது.
ஏற்கனவே தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் ஏராளமான குடிநீர் திட்ட கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. குழித்துறை ஆற்று குடிநீர் திட்டத்தில் செங்கிலாகம் என்னுமிடத்தில் 6 கிணறுகள் அமைந்துள்ளது. விளாத்துறை, புதுக்கடை, பைங்குளம், இனயம், புத்தன்துறை, கீழ்குளம் போன்ற 6 பஞ்சாயத்து பகுதியில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்கள் உப்புநீர் கலந்த குடிநீரை பருகி வருகிறார்கள். இந்த உப்புநீர் முழமூட்டுகடவு வரை கலப்பதால் கொல்லங்கோடு– ஏழுதேசம், மெதுகும்மல்– களியக்காவிளை ஆகிய இரு கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் கொல்லங்கோடு, ஏழுதேசம், சூழால், நடைக்காவு, வாவறை, மங்காடு, அடைக்காகுழி, குளப்புறம், மெதுகும்மல், களியக்காவிளை ஆகிய 10 பஞ்சாயத்து பகுதிகளில் வாழும் சுமார் 2 லட்சம் மக்களுக்கு கோடைகாலத்தில் உப்புநீர் கலந்த ஆற்றுநீரை நீரேற்றம் செய்து வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டம் வன்னியூர், தேவிகோடு, புலியூர்சாலை, மாங்கோடு ஆகிய பஞ்சாயத்து பகுதிகளுக்கு விரிவுபடுத்தப் படுவதால் இதே தண்ணீர்தான் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதுபோல ரூ.28 கோடி செலவில் காப்புக்காடு துடிச்சி குளத்தில் அமைக்கப்பட்டுள்ள 79 கடலோர குடியிருப்புகள் மற்றும் 17 பேரூராட்சிகள் மற்றும் 19 வழியோர குடியிருப்புகளுக்காக கூட்டுகுடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் பயன்பெறும் சுமார் 6 லட்சம் மக்கள் கோடைகாலத்தில் இதே தண்ணீரை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆற்றை ஒட்டியுள்ள ஊராட்சிகள் ஆற்றோரத்தில் திறந்தவெளி கிணறு அமைத்து தண்ணீரை மேல்நிலை தொட்டிகளுக்கு ஏற்றி, தண்ணீர் வினியோகம் செய்து வருகிறார்கள்.
மிகப்பெரிய கூட்டுகுடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகிற சூழ்நிலையில் உப்புநீரால் மக்கள் பெரும் அவதிப்படுகிறார்கள். மக்களின் குடிநீர் வாழ்வாதாரத்தையும், விவசாயத்தையும் காப்பாற்றுவதற்காகவும், நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காகவும் சட்டசபையில் நான் வலியுறுத்தியதின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பரக்காணி என்னுமிடத்தில் சுமார் ரூ.18 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை ஒன்று அமைக்கப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.
அதன் தொடர்ச்சியாக பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உயர்மட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறேன். இந்த நிலையில் இட ஆய்வு, நிர்வாக அனுமதி, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கி, நபார்டு வங்கியில் இருந்து நிதி பெற்று அரசாணை வெளியிடும் நிலையில் உள்ளது. அரசாணை வெளியிட்டவுடன் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு பணி தொடங்கப்படும். இதற்கிடையே ஒருசிலர் அரசியல் ஆதாயத்துக்காக மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இந்த குடிநீர் திட்டத்துக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story