பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் பொதுநிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து கட்சி நிர்வாகிகள், கலெக்டரிடம் மனு
பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் பொதுநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று அனைத்து கட்சி நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் பொதுநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று அனைத்து கட்சி நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கலெக்டரிடம் மனு
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் தலைமையில் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் நிஜாம் (ம.தி.மு.க.), பாஸ்கரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), காசிவிசுவநாதன் (இந்திய கம்யூனிஸ்டு), பாட்டபத்து முகமது அலி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கரிசல் சுரேஷ் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன் (காங்கிரஸ்), மீரான் மைதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), ரசூல்மைதீன் (மனிதநேய மக்கள் கட்சி), பிலால் (த.மு.மு.க.)மற்றும் கட்சி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர்.
அவர்கள் கலெக்டர் ஷில்பாவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அனுமதிக்க வேண்டும்
பாளையங்கோட்டை மார்க்கெட் திடலான ஜவகர் திடலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு அரசியல் கட்சியினர், மக்கள் நல அமைப்பினர், வியாபாரிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பொதுக் கூட்டம், கலைநிகழ்ச்சிகள், நாடகம் உள்ளிட்டவை நடத்தி வந்துள்ளனர். இது மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநகராட்சி மற்றும் காவல்துறையினருக்கும் நன்கு தெரியும்.
இந்தநிலையில் இங்கு பொதுநிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்க ஒரு தனிநபர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்று உள்ளார். அந்த இடத்தில் பொது நிகழ்ச்சிகள் நடத்த கோர்ட்டு தடைவிதித்து உள்ளது. எனவே அந்த தடை உத்தரவை திரும்ப பெறுவதற்கு மறுசீராய்வு மனு தாக்கல் செய்து அங்கு மீண்டும் பொது நிகழ்ச்சிகள் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story