ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை: அம்மன் கோவில்களில் பெண்கள் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு


ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை: அம்மன் கோவில்களில் பெண்கள் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 18 July 2018 3:00 AM IST (Updated: 18 July 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

ஆடி மாதம் முதல் செவ்வாய்கிழமையையொட்டி நெல்லையில் உள்ள அம்மன் கோவில்களில் பெண்கள் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

நெல்லை, 

ஆடி மாதம் முதல் செவ்வாய்கிழமையையொட்டி நெல்லையில் உள்ள அம்மன் கோவில்களில் பெண்கள் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை

ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை நேற்று என்பதால் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பேராத்து செல்வி அம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

சிறப்பு வழிபாடு

இதேபோல் நெல்லை டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவிலிலும் மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. நெல்லை டவுன் மாரியம்மன் கோவில், உச்சினிமாகாளி அம்மன் கோவில், முப்புடாதி அம்மன் கோவில், துர்க்கை அம்மன் கோவில், தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவில், பாளையங்கோட்டை முத்தாரம்மன் கோவில், ஆயிரத்தம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.

ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். நேற்று ஆடிமாதம் முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் ஏராளமான பெண்கள் எலுமிச்சை விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது.

Next Story