சென்னையில் முப்படை வீரர்களுக்கான ஓட்டப்பந்தயம்
சென்னையில் முப்படை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் முப்படை வீரர்களுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
சென்னை,
சென்னையில் உள்ள ரெஜிமெண்டல் மையத்தில் அமைந்துள்ள எம்.ஆர்.சி.தங்கராஜ் விளையாட்டு அரங்கில் முப்படை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் முப்படை வீரர்களுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முப்படையை சேர்ந்த 4 குழுக்கள் பங்கேற்றன. இதில் ஒரு குழுவுக்கு 6 வீரர்கள் வீதம் முப்படையை சேர்ந்த 24 வீரர்கள் பங்கேற்றனர்.
காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த ஓட்டப்பந்தயத்தில் ராணுவ சிவப்பு படையை சேர்ந்த சிப்பாய் அனில் குமார் யாதவ் பந்தய தூரத்தை 31 நிமிடம் 44 வினாடியில் கடந்து முதல் இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து அனீஷ் தாபா 2–வது இடத்தையும், நய்க் தீர்த்த குமார் 3–ம் இடத்தையும் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற ராணுவ வீரர்களுக்கு எம்.ஆர்.சி.ராணுவ முகாம் கமாண்டென்ட் பிரிகேடியர் எஸ்.கே.சாங்குவான் பதக்கங்கள் வழங்கினார்.
Related Tags :
Next Story