கடந்த மாதத்தைவிட காய்கறிகள் விலை உயர்வு விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தகவல்
காய்கறி விலை ஏற்றத்தின் காரணமாக பணவீக்கம் உயர்வு அடைந்துள்ளது. இந்த மாதம் இறுதியில் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
சென்னை கோயம்பேட்டில் பெரும்பாலான காய்கறிகள் கடந்த மாதத்தோடு ஒப்பிடுகையில் விலை அதிகரித்து உள்ளது. இதுகுறித்து கோயம்பேடு காய், கனி, மலர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் பொருளாளர் சுகுமார் கூறியதாவது:–
ஆடி மாதத்தையொட்டி காய்கறி விற்பனை சற்று மந்தமாக இருப்பது இயல்பு தான். இந்த மாத இறுதியில் காய்கறி விலை சுமார் 5 முதல் 10 சதவீதம் வரையிலும் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனாலும் ஆகஸ்டு மாதத்தில் மீண்டும் காய்கறி விலை உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பெய்யும் மழை தான் விளைச்சலை கொடுக்கக்கூடியது. இப்போது பெய்யும் மழை பயிர்களுக்கு சேதத்தை மட்டுமே ஏற்படுத்தும்.
விலை நிலவரம்
ஒரு கிலோவுக்கு காய்கறி விலை நிலவரம் (கடந்த மாத விலை அடைப்புக்குறிக்குள்) வருமாறு:–
தக்காளி ரூ.25 (ரூ.18), வெங்காயம் ரூ.25 (ரூ.20), சாம்பார் வெங்காயம் ரூ.50 (ரூ.30), பீன்ஸ் ரூ.50 (ரூ.80), கேரட் ரூ.30 முதல் ரூ.45 வரை (ரூ.20 முதல் ரூ.30 வரை), நூக்கல் ரூ.30 முதல் ரூ.40 வரை (ரூ.20 முதல் ரூ.30 வரை), சவ்சவ் ரூ.15 (ரூ.20), பீட்ரூட் ரூ.20 (ரூ.10), முட்டைக்கோஸ் ரூ.10 (ரூ.10), உருளைக்கிழங்கு ரூ.25 (ரூ.20), மிளகாய் ரூ.35 முதல் ரூ.40 வரை (ரூ.25 முதல் ரூ.30 வரை), இஞ்சி ரூ.75 முதல் ரூ.80 வரை (ரூ.60 முதல் ரூ.65 வரை)
சேப்பங்கிழங்கு ரூ.25 (ரூ.25), சேனைக்கிழங்கு ரூ.25 (ரூ.25), கத்தரிக்காய் ரூ.25 முதல் ரூ.30 வரை (ரூ.30 முதல் ரூ.40 வரை), அவரைக்காய் ரூ.30 (ரூ.25), கொத்தவரங்காய் ரூ.20 (ரூ.25), பாகற்காய் ரூ.35 (ரூ.30), காலிபிளவர் ரூ.15 (ரூ.20), முள்ளங்கி ரூ.15 (ரூ.20), புடலங்காய் ரூ.25 (ரூ.30), முருங்கைக்காய் ரூ.35 முதல் ரூ.40 வரை (ரூ.25 முதல் ரூ.30 வரை), வெண்டைக்காய் ரூ.25 (ரூ.25), பச்சை பட்டாணி ரூ.130 முதல் ரூ.140 வரை (ரூ.180 முதல் ரூ.200 வரை), சுரைக்காய் ரூ.10 (ரூ.10), தேங்காய் (காய் ஒன்று) ரூ.20 (ரூ.30), வாழைக்காய் (காய் ஒன்று) ரூ.8 முதல் ரூ.10 வரை (ரூ.12 முதல் ரூ.15 வரை) விற்பனை ஆனது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story