மாநகராட்சி பள்ளியில் மாணவிகள் போராட்டம்: தலைமை ஆசிரியையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
மாநகராட்சி பள்ளியில் மாணவிகள் போராட்டம் நடத்தியது குறித்து தலைமை ஆசிரியையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி திறக்கப்பட்டதும் பிளஸ்-1 மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்க பிளஸ்-2 மாணவிகளிடம் நிதி வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் வரவேற்பு நிகழ்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியையிடம் மாணவிகள் கேட்டுள்ளனர். அப்போது அவர் மாணவிகளை மரியாதைக் குறைவாக திட்டி உள்ளார். மேலும் அவர், மாணவிகள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளவும், போட்டி களில் பங்கேற்க அனுமதி வழங்காமலும் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள் கடந்த 11-ந் தேதி மாநகராட்சி கல்வி அதிகாரி அலுவலகத் தில் மனு அளித்தனர். ஆனால் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து கடந்த 13-ந் தேதி காலையில் மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பற்றி பள்ளி தலைமை ஆசிரியை மாணவிகளின் பெற்றோருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், மாணவிகளின் மாற்றுச்சான்றிதழ்களை பெற்றுச்செல்லுமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியையை மாற்றக்கோரி பள்ளியின் வாசல் முன் மாணவிகள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் மாநகராட்சி கல்வி அதிகாரி ரவி பேச்சுவார்த்தை நடத்தினார். அதை ஏற்று மாணவிகள் கலைந்துசென்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியையிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இது குறித்து மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண் கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மாணவிகளை திட்டியதாக புகார் வந்தது. எனவே மாணவ - மாணவிகளிடம் நல்லமுறையில் நடந்துகொண்டு, அவர்களுக்கு நல்லதையே கூற வேண்டும் என்று மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப் பட்டு உள்ளது என்றனர்.

Related Tags :
Next Story