வயல்வெளியில் பட்டாசு கழிவு கொட்டுவதை கண்காணிக்க உத்தரவு
விதிகளை மீறி வயல்வெளியில் பட்டாசுகழிவுகளை கொட்டுவதை தடுக்க இரவு பகலாக வருவாய்த்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.
தாயில்பட்டி,
தாயில்பட்டியில் சல்வார்பட்டி பிர்கா அளவில் நுண்ணுயிர் பாசன கருவி வழங்கும் திட்டத்தில் மானியம் பெற பயனாளிகள் தேர்வு நடந்தது. இதில் சிவகாசி தாசில்தார் பரமானந்தராஜா, தலைமை இடத்து தனி தாசில்தார் ஆனந்தராஜ், மண்டல துணை தாசில்தார் செந்தில்வேல், வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அதிகாரி சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் 125 பேர் தேர்ந் தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் தாசில்தார் பரமானந்த ராஜா பேசுகையில் கூறியதாவது:-
பட்டாசு கழிவுகளை வயல்வெளியில் வீசிச்செல்வது அதிகரித்துள்ளது. விதியை மீறி நடைபெறும் இந்த செயலால் விபத்து நிகழ்கிறது. இதில் வருவாய்த்துறையினர் உஷாராக இருந்து இரவு பகலாக கண்காணிக்க வேண்டும். அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதையும் தடுக்க வேண்டும். கிராம உதவியாளர்களை இந்த பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
யார் மீது சந்தேகம் ஏற்பட்டாலும் போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். சட்ட விரோதமாக பட்டாசு கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story