எனக்கு இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை; உங்களை விட்டு செல்கிறேன் மாணவரின் கடிதத்தில் உருக்கமான தகவல்
எனக்கு இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை, உங்களை விட்டு செல்கிறேன் என்று தற்கொலை செய்யும் முன்பு மாணவர் உருக்கமான கடிதம் எழுதி உள்ளார்.
கோவை,
தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு முன்பாக மாணவர் சஞ்சய் பிரசாந்த் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். 1½ பக்கத்தில் மிகவும் உருக்கமான வாசகங்கள் அதில் இடம் பெற்று இருந்தன. அது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது.
அம்மா, அப்பா என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். எனக்கு இந்த உலகில் வாழ பிடிக்க வில்லை. இதனால் நான் உங்களை விட்டு செல்கிறேன்.
நான் எப்போதுமே தனியாக இருப்பதாக உணருகிறேன். திடீர் திடீரென்று எனது கழுத்தை யாரோ நெரிப்பது போன்று இருக்கிறது. இதனால் என்னால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. உங்களிடமும் சரியாக பேச முடியவில்லை. இதனால் நான் பிரிந்து செல்கிறேன்.அன்புள்ள அண்ணா... நான் இல்லை என்று நீ கவலைப்படாதே. நான் சென்ற பின்னர் அம்மா, அப்பாவுக்கு நீ மட்டும் தான் இருக் கிறாய். என்னை பற்றி நினைத்துக்கொண்டே இருக்காதே. நன்றாக வேலை செய். அம்மா, அப்பாவை நன்றாக பார்த்துக்கொள். நான் இல்லை என்ற குறையை அவர்களுக்கு வைக்காதே.
அம்மா, அப்பா, அண்ணா மற்றும் எனது நண்பர்களை விட்டு செல்ல வருத்தமாகதான் இருக்கிறது. ஆனாலும் எனக்கு இந்த உலகத்தில் வசிக்க பிடிக்கவில்லை. எனவே நான் செல்கிறேன். அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள், அண்ணனை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று எழுதப்பட்டு இருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கல்லூரி பேராசிரியர் குறித்தும், கல்லூரியில் நடந்த சம்பவம் குறித்தும் எதுவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட வில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story