திருத்துறைப்பூண்டியில் தீவிபத்து: சிலிண்டர் வெடித்து 7 கூரை வீடுகள் எரிந்து நாசம்
திருத்துறைப்பூண்டியில் நடந்த தீ விபத்தில் சிலிண்டர் வெடித்து 7 கூரை வீடுகள் எரிந்து நாசமாகின. இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்டது மீனாட்சி வாய்கால் புதுதெரு. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜான் என்பவரின் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து அருகில் உள்ள வீரையன், விஜயகுமார், மைக்கில்ராஜ், ஆரோக்கியசாமி, மருதன், தருமராஜ் ஆகியோரின் கூரை வீடுகளுக்கும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் 7 கூரை வீடுகள் முழுவதும் எரிந்து நாசமாயின.
ஜான் என்பவர் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதில் உயிர் சேதம் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை அலுவலர் (பொறுப்பு) நடராஜன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் 7 கூரை வீட்டில் இருந்த கட்டில், பீரோ, டி.வி., உள்ளிட்ட பொருட்களும், ஒரு மோட்டார் சைக்கிளும் எரிந்து சேதமடைந்தன. இதன் சேத மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படு கிறது.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்து எப்படி? ஏற்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொடர்ந்து தீ விபத்து நடைபெறுவது திருத்துறைப்பூண்டி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story