அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அதிநவீன பிரசவ நாற்காலி பயன்பாட்டிற்கு விடப்பட்டது
திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அதிநவீன பிரசவ நாற் காலி பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
திருவாரூர்,
திருவாரூர் அரசு மருத்துவகல்லூரியில் அதிநவீன பிரசவ நாற்காலி பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவகல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கி, பிரசவ நாற்காலியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சாதாரணமாக கர்ப்பிணிகளுக்கு படுத்துள்ள நிலையில் பிரசவம் நடைபெறும். இதில் இருதய கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளுக்கு படுத்த நிலையில் பிரசவிக்க சிரமப்படுவார்கள். இந்த கர்ப்பிணிகளின் தலையை உயர்த்துவதற்காக தலையணைகள் அல்லது சாய்வு பலகை வைக்கப்படும். ஒவ்வொரு கர்ப்பிணிகள் பிரசவ நிலை வேறுபடுவது இயல்பு. இதனால் ரிமோட் மூலம் இயக்க கூடிய அதிநவீன பிரசவ நாற்காலி திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த நாற்காலி தேவைக்கு ஏற்ப தலைப்பகுதியை உயர்த்தி கொள்ளும் வசதி உள்ளது.
மேலும் கர்ப்பிணிகள் பிடித்து கொள்ள 2 கைப்பிடிகளும், நஞ்சு கொடியினை சேகரிக்க கொள்கலன்கள், குளுக்கோஸ் திரவங்களை ஏற்றுதற்காக நாற்காலியிலேயே வசதி செய்யப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள நவீன நாற்காலி கர்ப்பிணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மகப்பேறு துறை டாக்டர்கள் பாக்கியவதி, சுமதி, துணை கண்காணிப்பாளர் டாக்டர். கண்ணன், துணை முதல்வர் ராஜா, நிலைய மருத்துவ அலுவலர் (பொறுப்பு) அன்சாரி, செவிலிய கண்காணிப்பாளர் ராஜாத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story