எலி காய்ச்சலுக்கு வாலிபர் உள்பட 2 பேர் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு


எலி காய்ச்சலுக்கு வாலிபர் உள்பட 2 பேர் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
x
தினத்தந்தி 18 July 2018 5:00 AM IST (Updated: 18 July 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

எலி காய்ச்சலுக்கு வாலிபர் உள்பட 2 பேர்உயிரிழந்தனர். இதன் மூலம்மும்பையில் எலி காய்ச்சலுக்கு பலி ஆனவர்களின் எண்ணிக்கை 5 ஆகஉயர்ந்துஉள்ளது.

மும்பை, 

எலி காய்ச்சலுக்கு வாலிபர் உள்பட 2 பேர்உயிரிழந்தனர். இதன் மூலம்மும்பையில் எலி காய்ச்சலுக்கு பலி ஆனவர்களின் எண்ணிக்கை 5 ஆகஉயர்ந்துஉள்ளது.

2 பேர் பலி

மும்பை சயான் பிரதீக்சா நகரை சேர்ந்தவர் தேவனன்(வயது42). இவர் கிர்காவ் பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் வந்தது. வீட்டு அருகில் உள்ள கிளினிக்கில் சிகிச்சை பெற்றார். ஆனால் காய்ச்சல் குறையவில்லை. இந்தநிலையில் 3 நாட்கள் கழித்து அவருக்கு வாந்தியும், வயிற்று போக்கும் ஏற்பட்டு உடல் நிலை மோசமானது.

இதையடுத்து அவர், சுன்னாப்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு எலி காய்ச்சல் நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒர்லியை சேர்ந்த 17 வயது வாலிபர் கே.இ.எம். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

டாக்டர் விளக்கம்

ஏற்கனவே மும்பையில் எலிக்காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகி இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து உள்ளது. இது குறித்து கே.இ.எம். மாநகராட்சி ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறியதாவது:-

விலங்குகளின் சிறுநீர் கலந்த மற்றும் அசுத்தமான மழைநீரில் நடந்து செல்லும் போது கிருமிகள் கால் வழியாக நமது உடலுக்குள் சென்று எலிகாய்ச்சல் ஏற்படுகிறது. பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டவுடன் உரிய சிகிச்சை பெறாமல் தாமதமாக ஆஸ்பத்திரிக்கு செல்வது தான் எலி காய்ச்சல் உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாகும்.

எனவே பொதுமக்கள் காய்ச்சல் வந்தவுடன் சிகிச்சைக்காக மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story