உல்லாஸ்நகரில் 11 வயது சிறுவன் கழுத்து அறுத்து கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
உல்லாஸ்நகரில் 11 வயது சிறுவன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டான்.கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பர்நாத்,
உல்லாஸ்நகரில் 11 வயது சிறுவன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டான்.கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவன் கொலை
தானே மாவட்டம் உல்லாஸ்நகரை சேர்ந்த சிறுவன் ஹர்ஷ் அல்காட் (வயது11). அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தான். நேற்றுமுன்தினம் மாலை வரை வீட்டில் இருந்த அவன் திடீரென இரவு காணாமல் போய்விட்டான்.
இதனால் கலக்கம் அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர்.
இந்தநிலையில், இரவு 10 மணியளவில் அவனது வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு வீட்டுக்குள் ஹர்ஷ் அல்காட் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான். அவனது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது.
போலீஸ் விசாரணை
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனது உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். என்ன காரணத்திற்காக சிறுவன் ஹர்ஷ் அல்காட் கொலை செய்யப்பட்டான் என்பது தெரியவில்லை.
சிறுவன் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் போலீசார் அந்த பகுதியை சேர்ந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 11 வயது சிறுவன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story