திருப்பூர் பகுதிகளில் மதுவிற்பனை செய்த 15 பேர் கைது; 139 பாட்டில்கள் பறிமுதல்


திருப்பூர் பகுதிகளில் மதுவிற்பனை செய்த 15 பேர் கைது; 139 பாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 July 2018 4:12 AM IST (Updated: 18 July 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் பகுதிகளில் மது விற்பனை செய்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 139 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூர், 

திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நேற்று முன்தினம் யூனியன் மில் ரோடு பகுதியில் ரோந்து சுற்றி கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு மது விற்பனை செய்துகொண்டிருந்த முருகேசன் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுபோல் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மது விற்பனை செய்த சின்னதம்பி (48), பன்னீர்செல்வம் (27), ராதாகிருஷ்ணன் (30), அனுபாண்டி (23), காளஸ்வரன் (24) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதுபோல் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட தாராபுரம் ரோடு பகுதிகளில் தெற்கு போலீசார் ரோந்து சுற்றி கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த வேல் (31), விக்னேஷ்வரன் (24), மகாலிங்கம் (35), மகேந்திரன் (38), கார்த்திக் (27) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 52 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையின் போது அவினாசி ரோட்டில் மது விற்பனை செய்த ஆறுமுகம் (24), பத்மநாபன் (26), சுரேஷ்குமார் (32), கருப்பையா (22) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் 55 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 15 பேரை கைது செய்த போலீசார் 139 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். 

Next Story