குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 18 July 2018 4:44 AM IST (Updated: 18 July 2018 4:44 AM IST)
t-max-icont-min-icon

அவினாசியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

அவினாசி, 

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவினாசியில் உள்ள 18 வார்டுகளுக்கும் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் இணைப்பு வழங்கி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் கிடைப்பதில்லை. நேற்று அவினாசி 8-வது வார்டு பொதுமக்கள் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில் “எங்கள் வார்டிற்கு போதுமான அளவு தண்ணீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. இதனால் நாங்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். நிர்வாகத்திடம் கேட்டால் மேட்டுப்பாளையத்தில் மின்வினியோகம் இல்லை. ஆற்றில் தண்ணீர் அதிகம் வந்துவிட்டதால் அங்கிருந்து குடிநீர் வினியோகம் செய்யவில்லை. குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு விட் டது என்று ஏதோதோ காரணங்கள் கூறுகின்றனர். குடிநீர் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்திவிட்டு தேவைக்கேற்ப குடிநீர் வினியோகம் செய்யவில்லை.எனவே எங்களுக்கு முறையாக தடையின்றி குடிநீர் கிடைக்க வேண்டும் அதற்காக இங்கு வந்துள்ளோம்” என்று கூறினார்கள்.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில் “கடந்த 3 நாட்களாக மேட்டுப்பாளையத்தில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் சுழற்சி முறையிலேயே தண்ணீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது.

உங்கள் வார்டுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. எனவே முறைப்படி உங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறி அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். 

Next Story