மாநிலத்தில் பரவலாக பலத்த மழை முக்கிய அணைகளில் 75 சதவீதம் தண்ணீர் நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி


மாநிலத்தில் பரவலாக பலத்த மழை முக்கிய அணைகளில் 75 சதவீதம் தண்ணீர் நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி
x

மராட்டியத்தில் பரவலாக பெய்த பலத்த மழையின் காரணமாக முக்கிய அணைகளின் கொள்ளளவில் 75 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளன.

மும்பை, 

மராட்டியத்தில் பரவலாக பெய்த பலத்த மழையின் காரணமாக முக்கிய அணைகளின் கொள்ளளவில் 75 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளன.

பலத்த மழை

மராட்டியத்தில் நடப்பு பருவமழை காலத்தில் அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக பர்பானி, அகமத்நகர், நாசிக், அவுரங்காபாத் மற்றும் நாந்தெட் மாவட்டங்களில் அபரிமிதமான மழை பெய்தது. மேலும் சோலாப்பூர், ஹிங்கோலி, வாசிம், லாத்தூர், உஸ்மனாபாத் மற்றும் பீட் ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழை விவசாயத்தை நம்பியுள்ள அந்த பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோதாவரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கங்காபூர் அணையின் நீர்மட்டம் 75 சதவீதத்தை எட்டியுள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வினாடிக்கு 4 ஆயிரத்து 716 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.

ெஜயக்வாடி அணை

இதேபோல் நாசிக்கில் உள்ள தர்ணா அணையும் முழு கொள்ளளவில் 76 சதவீதத்தை எட்டியுள்ளது. எனவே இந்த அணையில் இருந்தும் வினாடிக்கு 6 ஆயிரத்து 602 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் மரத்வாடா மண்டல மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அவுரங்காபாத் மாவட்டம் அருகே உள்ள ெஜயக்வாடி அணை நிரம்பி உள்ளது.

மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story