தீ விபத்து நடந்த கட்டிடத்தின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்படும் கலெக்டர் ஷில்பா பேட்டி


தீ விபத்து நடந்த கட்டிடத்தின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்படும் கலெக்டர் ஷில்பா பேட்டி
x
தினத்தந்தி 19 July 2018 3:15 AM IST (Updated: 18 July 2018 11:13 PM IST)
t-max-icont-min-icon

தீ விபத்து நடந்த கட்டிடத்தின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்படும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

தீ விபத்து நடந்த கட்டிடத்தின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்படும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

பள்ளிக்கூடத்தில் ஆய்வு செய்த நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். அந்த பள்ளிக்கூட முதல்வரிடம் பள்ளி கட்டிடங்கள் பற்றிய விவரங்களை சேகரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் கலெக்டர் ஷில்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

தீ விபத்து நடந்த கட்டிடம் 1990-ம் ஆண்டில் கட்டப்பட்டது. முறையான ஆவணங்கள், தீயணைப்பு சாதனங்கள் இருக்கிறதா? என ஆய்வு செய்து வருகிறோம். மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா? அல்லது ஆய்வக அறையில் உள்ள திராவகங்கள் கொட்டி தீப்பிடித்ததா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் தவறு இருந்தால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுதித்தன்மை ஆய்வு

இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவ-மாணவிகளுக்கு காயம் ஏற்படவில்லை. உடனடியாக அவர்கள் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை. தீ விபத்து நடந்த கட்டிடத்தின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்படும். அதன் பின்னர் அங்கு வகுப்புகள் நடத்தப்படும்.

தற்போது இந்த தீ விபத்து குறித்தும், பள்ளிக்கூடத்தின் கட்டிடம் தொடர்பாகவும் விசாரணை நடத்த குழு அமைக்கப்படும். குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளிக்கூடங்களும் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விதிமுறைகளை மீறும் பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story