திருத்தணியில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.90 ஆயிரம் மாயம்


திருத்தணியில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.90 ஆயிரம் மாயம்
x
தினத்தந்தி 18 July 2018 10:30 PM GMT (Updated: 18 July 2018 8:22 PM GMT)

திருத்தணியில் விவசாயியின் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.90 ஆயிரம் மாயமானது.

திருத்தணி,

திருத்தணி அருகே உள்ள லட்சுமாபுரம் பகுதியில் உள்ள சொட்டாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 45). விவசாயி. இவர் திருத்தணி -சித்தூர் சாலையில் உள்ள ஒரு வங்கியில் தனக்கு சொந்தமான 6 பவுன் தங்க நகையை அடமானம் வைத்து ரூ.90 ஆயிரம் கடன் பெற்றார்.

பின்னர் அந்த பணத்தை ஒரு பையில் வைத்து அதை தன்னுடைய மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்து கொண்டு திருத்தணி ம.பொ.சி. சாலையில் உள்ள கடைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பழங்கள் வாங்கினார்.


திரும்பி வந்து பார்க்கும் போது அவரது மோட்டார் சைக்கிளில் வைத்து இருந்த ரூ.90 ஆயிரம் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து ராமன் திருத்தணி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கடைகளில் வைக்கப் பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

Next Story