திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி


திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
x
தினத்தந்தி 19 July 2018 3:45 AM IST (Updated: 19 July 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியானார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள புதுச்சத்திரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 58). இவர் கடந்த 13-ந் தேதியன்று வேலையின் காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் திருவள்ளூரை அடுத்த புட்லூருக்கு சென்றார். பின்னர் அவர் வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவர் திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே மாடு வந்தது.

அப்போது திடீரென பிரேக் பிடித்த அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.


அப்போது அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story