தண்டையார்பேட்டையில் மோதல்-கல்வீச்சு சம்பவத்துக்கு மதுசூதனனே காரணம் தினகரன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


தண்டையார்பேட்டையில் மோதல்-கல்வீச்சு சம்பவத்துக்கு மதுசூதனனே காரணம் தினகரன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 July 2018 5:00 AM IST (Updated: 19 July 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

தண்டையார்பேட்டையில் மோதல்-கல்வீச்சுக்கு மதுசூதனனே காரணம் என்று டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.


சென்னை,

இந்த மோதல்-கல்வீச்சு சம்பவம் தொடர்பாக டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-


தண்டையார்பேட்டையில் நடந்த மோதல், கல்வீச்சு சம்பவத்துக்கு காரணம் மதுசூதனன்தான். பொதுமக்கள் போர்வையில் அவரது ஆதரவாளர்களுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்து மோதலை தூண்டுகிறார். எங்களது ஆதரவாளர்கள் அமைதியான முறையில் சட்டம்-ஒழுங்கு சீர்கெடாத வகையில் அமைதியாக இருந்தனர். அ.தி.மு.க.வினர் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டனர்.

மோதல் நடந்தபோது போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்தனர். மதுசூதனன் அமைச்சராக இருந்தபோது, அவருடைய மனைவி பெயரில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக வீடுகள் பெற்று உள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலின் போது சொத்து கணக்காக முறைகேடாக வாங்கிய வீட்டையும் அவர் காட்டி உள்ளார்.


இது குறித்து பழனி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். காழ்ப்புணர்ச்சி காரணமாக மோதலை உண்டாக்கும் செயலில் மதுசூதனன் தனது ஆதரவாளர்களுடன் ஈடுபட்டு உள்ளார். ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் எந்த ஒரு வளர்ச்சி பணியையும் நடக்கவிடாமல் முட்டுக்கட்டையாக உள்ளார். இதனால் பல்வேறு நலத்திட்டபணிகள் கிடப்பில் உள்ளது.

நலத்திட்ட பணிகளை செயல்படுத்தும் அதிகாரிகளை உடனே இடமாற்றம் செய்கின்றனர். தற்போது நடந்து வரும் வருமான வரி சோதனை கண் துடைப்பு. ஏற்கனவே பலகோடி ரூபாய்கள், வாகனம் மற்றும் லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. மேலும் பல கோடி ரூபாய் வாகனங்களில் தமிழ்நாட்டுக்குள்ளும் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story