வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிப்பு வாலிபர் மடக்கி பிடித்தார்
போரூர் அருகே வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து பெண்ணை கத்தியால் குத்தி நகை பறித்தவரை வாலிபர் மடக்கி பிடித்தார்.
பூந்தமல்லி,
சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரம், முத்துமாரி அம்மன் நகரை சேர்ந்தவர் நிர்மலா (வயது 56). இவரது வீட்டின் மேல் மாடியில் 2 வீடுகளில் ஒரு வீட்டில் ஒரு குடும்பம் வாடகைக்கு வசித்து வருகிறது. மற்றொரு வீட்டை வாடகைக்கு விடுவதாக நிர்மலா போர்டு வைத்துள்ளார்.
அந்த வீட்டை வாடகைக்கு கேட்க நேற்று மாலை கணவன், மனைவி போல் 2 பேர் வந்தனர். வீட்டை சுற்றி பார்த்து விட்டு நிர்மலா வசிக்கும் கீழ் வீட்டில் சென்று குடிக்க தண்ணீர் கேட்டனர். நிர்மலா தண்ணீர் கொண்டு வர வீட்டினுள் சென்றார்.
அப்போது பின் தொடர்ந்து கையில் கத்தியுடன் சென்ற அந்த நபர், நிர்மலாவை கீழே தள்ளி அவர் காதில் இருந்த கம்மலை அறுத்தார். பின்னர் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்தார். நிர்மலா போராடியதால் இருவருக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.
நிர்மலாவின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசித்து வந்த வாலிபர் தமீம் அன்சாரி ஓடி வந்தார். இதனால் தப்பி ஓட முயன்ற நபரை மடக்கி பிடித்து சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து அந்த நபரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த நபருடன் வந்த பெண் லாவகமாக அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் திருச்சியை சேர்ந்த தட்சணாமூர்த்தி (36) என்பதும், இவர் மீது சிட்லப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நகை பறித்த வழக்கு இருப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து நகையை மீட்டனர். மேலும் தப்பியோடிய அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
காயம் அடைந்த நிர்மலா தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நகை பறித்த நபரை மடக்கி பிடித்த தமீம் அன்சாரியை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Related Tags :
Next Story