சென்னையில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த 3 பெண்கள் துறவறம்
சென்னையில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த 3 பெண்கள் ஆடம்பர வாழ்க்கையை துறந்து, துறவறம் பூண்டனர்.
சென்னை,
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குஷ்பு ஆச்சா(வயது 31). மராட்டிய மாநிலம் அவுரங்கபாத் பகுதியை சேர்ந்தவர்கள் ஹேதல் சுரானா(29), அன்கிதா சேத்தியா(24). 3 பேரும் ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள். பட்டப்படிப்பு முடித்துள்ளனர். பெரும் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
இந்தநிலையில் ஆடம்பர வாழ்க்கையில் நாட்டமில்லாமல் 3 பேரும் துறவறம் மேற்கொள்ள விரும்பினர். அதன்படி பெற்றோர்கள் விருப்பத்துடன் ராஜஸ்தான் மாநிலம் லாட்னுவில் அமைந்துள்ள பரமார்த்திக கல்வி நிறுவனத்தில் ஜைன துறவறம் குறித்த பயிற்சி பெற்றனர்.
இதையடுத்து 3 பெண்களும் துறவறம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி சென்னை பெரம்பூர் பின்னி மில் எதிரே உள்ள நார்த் டவுன் குடியிருப்பு வளாகத்தில் நேற்று நடந்தது. ஆசார்யர் ஸ்ரீ மஹாஸ்ரமண், ஜைன துறவு விதிமுறைகளின்படி உரிய சடங்குகள் நடத்தி 3 பெண்களையும் துறவற பாதைக்கு அழைத்து சென்றார்.
துறவற வாழ்க்கை பூண்டவுடன் குஷ்பு ஆச்சா பெயர் கம்பீரா எனவும், ஹேதல் சுரானா பெயர் இமான் சூ என்றும், அன்கிதா சேத்தியா பெயர் ஆலோக் எனவும் மாற்றம் செய்யப்பட்டது.
முன்னதாக 3 பெண்களும் ஆடம்பர ஆபரணங்கள், ஆடையுடன் சாரட் வண்டியில் நேற்று முன்தினம் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.
ஜெயின் சமூகத்தின் சம்பிரதாயப்படி, துறவறம் மேற்கொள்வோர்கள் எளிய வாழ்க்கை மட்டுமே வாழ வேண்டும். வீட்டில் தங்க கூடாது. ஜெயின் கோவிலில் தான் தங்க வேண்டும். காலணி, ஆடம்பர உடைகள், ஆபரணங்கள் அணியக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாதவரம் தட்டாங்குளம் சாலையில் உள்ள ஆசார்யர் ஸ்ரீ மஹாஸ்ரமண் சாதுர்மாஸ் ப்ரவாஸ் வியவஸ்தா சமிதியில் 21-ந்தேதி புனித நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். 22-ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொள்ள உள்ளார்.

Related Tags :
Next Story