வேலை கிடைக்காத விரக்தியில் ஆகாய நடைபாதையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை மேற்குவங்கத்தை சேர்ந்தவர்


வேலை கிடைக்காத விரக்தியில் ஆகாய நடைபாதையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை மேற்குவங்கத்தை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 19 July 2018 5:15 AM IST (Updated: 19 July 2018 5:06 AM IST)
t-max-icont-min-icon

வேலை கிடைக்காத விரக்தியில் ஆகாய நடைபாதையில் தூக்குப் போட்டு மேற்கு வங்கத்தை சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

மும்பை, 

வேலை கிடைக்காத விரக்தியில் ஆகாய நடைபாதையில் தூக்குப் போட்டு மேற்கு வங்கத்தை சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

தூக்கில் தொங்கிய வாலிபர்

மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் ஆகாய நடைபாதை உள்ளது. இந்த ஆகாய நடைபாதையில் உள்ள இரும்பு சட்டத்தில் நேற்றுமுன்தினம் மாலை வாலிபர் ஒருவர் திடீரென தூக்குப்போட்டு தொங்கினார்.

இதைப்பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டனர்.

உடனடியாக அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வேலை கிடைக்காத விரக்தி

இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட அந்த வாலிபர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சம்சுதீன்(வயது34) என்பது தெரியவந்தது.

வேலை தேடி மும்பை வந்த அவர், பாந்திரா சாஸ்திரி நகரில் தனது சகோதரருடன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். மும்பையில் எந்த வேலையும் அவருக்கு கிடைக்கவில்லை.

இதனால் விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story