மணல் கடத்தல்; 3 பேர் கைது 2 மினிலாரிகள் பறிமுதல்


மணல் கடத்தல்; 3 பேர் கைது 2 மினிலாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 July 2018 3:00 AM IST (Updated: 19 July 2018 10:31 PM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தலில் ஈடுப்பட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 2 மினிலாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

நெல்லிக்குப்பம்,

ரெட்டிச்சாவடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக் கொண்டு வந்த 2 மினி லாரிகளை போலீசார் மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில், மினிலாரியில் புதுவைக்கு மணல் கடத்தப்பட்டது தெரியவந்தது. 

இதையடுத்து மணல் கடத்தியதாக புதுவையை சேர்ந்த மணிபாலன் (வயது 22), புருஷோத்தமன் (45), குணசேகரன் (28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 மினிலாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story