தென்காசியில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது
தென்காசியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி,
தென்காசியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆட்டோ தீப்பிடித்தது
தென்காசி கீழப்பாளையம் தெருவை சேர்ந்த சுப்புராமன் மகன் மகேஷ் (வயது 30). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது ஆட்டோவை வழக்கம் போல் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பின்னர் மகேஷ் நேற்று காலை சொந்த வேலை காரணமாக வெளியூருக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோவில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் முடியவில்லை. இதுகுறித்து உடனடியாக தென்காசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் ஆட்டோ முற்றிலும் எரிந்து நாசமானது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து மகேசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் திரும்பி வந்து தென்காசி போலீசில் புகார் செய்தார். ஆட்டோவில் பேட்டரியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story