குழந்தைகளை தத்தெடுப்பவர்கள் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் கலெக்டர் ஷில்பா பேச்சு


குழந்தைகளை தத்தெடுப்பவர்கள் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் கலெக்டர் ஷில்பா பேச்சு
x
தினத்தந்தி 20 July 2018 4:00 AM IST (Updated: 20 July 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளை தத்தெடுப்பவர்கள் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.

நெல்லை, 

குழந்தைகளை தத்தெடுப்பவர்கள் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.

கருத்தரங்கு

நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் மாநில தத்துவள ஆதார மையம், சமூக பாதுகாப்பு சார்பில் குழந்தைகள் நலன் குறித்து தத்தெடுப்பு விதிமுறைகள்-2017 மற்றும் சட்டவிரோதமாக தத்தெடுப்பதை தடுப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பதிவு செய்வது கடமை

நல்ல பெற்றோர்கள் கிடைப்பது குழந்தைகளின் பாக்கியம் ஆகும். ஏதாவது ஒரு சூழலில் பெற்றோரோல் கைவிடப்பட்ட குழந்தைகளை தத்து எடுப்பவர்கள், அந்த குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். அதோடு மட்டுமின்றி சட்டப்படி பதிவு செய்வது கடமை ஆகும். சட்டப்படி பதிவு செய்து குழந்தைகளை வளர்க்கும்போது எந்த ஒரு பிரச்சனைக்கும் இடமில்லாமல் போகும்.

இந்த விழிப்புணர்வு பணிகளை, முதலாவதாக கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவ துறையினர், சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு பிரிவினர், நன்னடத்தை அலுவலர்கள், சமூக சேவை சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து சேவை நோக்குடன் செய்ய வேண்டும். பொதுமக்கள் இதுகுறித்த விவரங்கள் பெற அருகிலுள்ள தத்துவள மையங்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு பின்பற்றி குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், முதன்மை நன்னடத்தை அலுவலர் ஆல்பர்ட் டேவிட், நன்னடத்தை அலுவலர்கள் ஜோஷியாராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவ்ஆனந்த், சிறப்பு தத்துமைய இயக்குனர் ஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கருத்தரங்கில் விழிப்புணர்வு விளம்பர பலகையை கலெக்டர் ஷில்பா திறந்துவைத்து பார்வையிட்டார்.

Next Story