அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரி கட்டணத்தை குறைக்கலாம்
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி கட்டணத்தை குறைக்கலாம் என்று சபாநாயகர் வைத்திலிங்கம் யோசனை தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
அன்பழகன்: புதுவை அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர், முதுநிலை மருத்துவர், டெக்னீசியன் உள்ளிட்ட எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன?
முதல்-அமைச்சர் நாராயணசாமி: 21 மருத்துவர், 16 மருத்துவ நிபுணர், செவிலியர் 2, டெக்னீஷியன் 26, மற்ற பதவிகள் 75 என மொத்தம் 140 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அன்பழகன்: புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை என்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளர்கள். ஆனால் கட்டணத்தை குறைக்கக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியவில்லை. மாணவர்களின் பின்னணியில் யார் உள்ளார்கள்? பல லட்சம் ரூபாய் கொடுத்து தனியார் பள்ளியில் படிக்க வந்தவர்களுக்கு ரூ.1.30 லட்சம் பெரிய விஷயமல்ல.
என்.எஸ்.ஜே.ஜெயபால் (என்.ஆர்.காங்): அவர்கள் 3 நாட்களாக போராடுகிறார்கள்.
அசோக் ஆனந்து (என்.ஆர். காங்): அவர்களுக்கான கட்டணத்தை குறைக்கவேண்டும்.
சபாநாயகர் வைத்திலிங்கம்: மாணவர்கள் கல்விக்கட்டணம் தொடர்பாக அரசிடம் ஏதேனும் கோரிக்கை வைத்துள்ளார்களா? அவர்கள் உடனே ரோட்டுக்கு வரவேண்டிய அவசியம் என்ன?
அன்பழகன்: மாணவர்களின் போராட்டத்தை எம்.எல்.ஏ.க்கள் ஊக்குவிக்கக்கூடாது.
எம்.என்.ஆர்.பாலன் (காங்): எல்.கே.ஜி.க்கு ரூ.75 ஆயிரம் வாங்குகிறார்கள்.
சபாநாயகர் வைத்திலிங்கம்: பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் தனியார் பள்ளியில் ரூ.1 லட்சத்துக்கு குறையாமல் வாங்குகிறார்கள்.
நாராயணசாமி: மாணவர்களுக்கு கல்வி தருவது அரசின் கடமை. மாணவர்கள் கல்விக்கட்டணம் தொடர்பாக என்னை சந்தித்து பேசினார்கள். தனியார் கல்லூரிகளில் சென்டாக் மாணவர்களிடம் இருந்து ரூ.3.25 லட்சம் கட்டணம் வசூலிக்கிறார்கள். நாங்கள் முன்பு இருந்தைவிட ரூ.50 ஆயிரம்தான் கூட்டினோம். அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஒரு வருடத்துக்கு ரூ.84 கோடி செலவாகிறது.
எம்.என்.ஆர்.பாலன்: தனியார் பள்ளியில் பல லட்சம் ரூபாய் கொடுத்து படித்துவிட்டுதான் அரசு கல்லூரியில் வந்து சேர்ந்துள்ளார்கள்? ஆனால் கட்டணத்தை சிறிது உயர்த்த எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அந்த கல்லூரியை நடத்த வேண்டாமா?
சபாநாயகர் வைத்திலிங்கம்: சிவப்பு நிற ரேசன்கார்டு வைத்திருப்பவர்கள் (வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகள்), அரசு பள்ளியில் படித்து வந்த மாணவர்களுக்கு மட்டும் கட்டணத்தை மறுஆய்வு செய்ய முடியுமா? என்று பாருங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Tags :
Next Story