சென்னிமலை அருகே உள்ள குளத்தில் சாயக்கழிவு நீர் கலப்பா? அதிகாரி ஆய்வு


சென்னிமலை அருகே உள்ள குளத்தில் சாயக்கழிவு நீர் கலப்பா? அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 19 July 2018 10:15 PM GMT (Updated: 19 July 2018 7:33 PM GMT)

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட சாய ஆலைகளும், 5 தோல் தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு தனித்தனியே பொது சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.

சென்னிமலை,

இந்த நிலையில் நீர்நிலைகளில் சாயக்கழிவு நீர் கலப்பதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமையில் மாவட்ட கலெக்டர் உட்பட உயர் அதிகாரிகள், தொழிற்சாலை உரிமையாளர்கள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து 3 முறை ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து வெளி மாநில அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு மாதம்தோறும் ஆய்வு நடத்தப்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் வாரம் 2 முறை சாய, தோல் தொழிற்சாலைகள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. இது தவிர பறக்கும் படையை சார்ந்த சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் செல்வகுமார் தலைமையில் நீர் நிலைகளின் டி.டி.எஸ். அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னிமலை அருகே உள்ள ஓடையக்காட்டூர் குளத்தில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனால் அந்த தண்ணீரில் சாயக்கழிவு நீர் கலந்துள்ளதா? என நேற்று பறக்கும் படை உதவி சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் செல்வக்குமார் ஆய்வு செய்தார். அப்போது தண்ணீரில் 3 ஆயிரம் டி.டி.எஸ். உப்புத்தன்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Next Story