நெல்லை அருகே தோட்டத்தில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 6 பேர் கைது
நெல்லை அருகே தோட்டத்தில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேட்டை,
நெல்லை அருகே தோட்டத்தில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தோட்ட காவலாளி
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள நடுக்கல்லூரைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 50). இவர் அங்குள்ள ஒரு தோட்டத்தில் காவலாளியாக உள்ளார். இந்த தோட்டத்தில் சிலர் பதுங்கி இருந்து சதித்திட்டம் தீட்டுவதாக சுத்தமல்லி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரி சித்ரா மற்றும் போலீசார் அந்த தோட்டத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு இருந்த செல்வம் உள்பட 6 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினார்.
6 பேர் கைது
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சேரன்மாதேவியில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக சேரன்மாதேவியைச் சேர்ந்த இசைகார்த்திக் (22), சிவா (28), வக்கீல் முருகன் (29), தெற்கு சங்கன்திரடை சேர்ந்த முப்பிடாதி (23), கொம்பையா (37) ஆகியோர் செல்வம் காவலாளியாக வேலை பார்க்கும் தோட்டத்தில் வைத்து சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story