இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: மாவட்டம் முழுவதும் 20 ஆயிரம் லாரிகள் ஓடாது
காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் லாரிகள் ஓடாது என்று வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்வக்குமார் கூறினார்.
காட்பாடி,
18 சதவீத வரிவிதிப்புடன் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும். நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரே சீரான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. இதுதொடர்பாக சங்க தலைவர் செல்வக்குமார் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
டீசல் தினசரி விலை உயர்வதால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் மக்களும் சிரமமடைந்துள்ளனர். ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும்.
3-ம் நபர் காப்பீட்டு தொகை கடந்த ஆண்டு 40 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பிறகு ஐ.ஆர்.டி.ஏ. உடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமார் 17 சதவீதமாக 3-ம் நபர் காப்பீடு தொகை குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் முன் அறிவிப்பு இல்லாமல் 3-ம் நபர் காப்பீடு தொகை 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் கட்டுப்பாடின்றி கட்டணம் உயர்த்தியுள்ளனர். இது பகல் கொள்ளையாகும். சாலையை சரிவர பராமரிக்காமல் கட்டணம் உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. காலாவதி சுங்கச்சாவடிகளில் தொடர்ந்து கட்டணம் வசூலிப்பது மிகப்பெரிய மோசடியாகும்.
தமிழக அரசு இதுவரை இல்லாத அளவு திடீரென டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியுள்ளது. சமீபத்தில் கேரள அரசு டீசல் மீதான வாட் வரியை குறைத்தது. டீசல், பெட்ரோல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இன்று காலை 6 மணி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்குகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் 93 லட்சம் லாரிகள் இயங்காது. இதனால் சுமார் 5 கோடி பேர் வேலை இழப்பார்கள். நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கும். அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் லாரிகளும், வேலூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறது. காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக வருகிற 22-ந் தேதி பொதுமக்களும் தங்களின் வாகனங்களை இயக்காமல் பெட்ரோல், டீசல் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, கவுரவ தலைவர் தருமலிங்கம் மற்றும் துணைத் தலைவர்கள் மார்க்கபந்து, தயாளன், செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் கோவிந்தராஜூ ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம் தொடர்பான நோட்டீசை லாரிகளில் ஒட்டினார்கள்.

Related Tags :
Next Story