‘பேஸ்புக்’கில் பழகி வங்கி பெண் ஊழியரிடம் ரூ.17½ லட்சம் மோசடி மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


‘பேஸ்புக்’கில் பழகி வங்கி பெண் ஊழியரிடம் ரூ.17½ லட்சம் மோசடி மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 20 July 2018 5:00 AM IST (Updated: 20 July 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

‘பேஸ்புக்’கில் பழகி வங்கி பெண் ஊழியரிடம் ரூ.17½ லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை, 

‘பேஸ்புக்’கில் பழகி வங்கி பெண் ஊழியரிடம் ரூ.17½ லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

அமெரிக்க நண்பர்

ராய்காட் மாவட்டம் அலிபாக் பகுதியில் 50 வயது வங்கி பெண் ஊழியர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் ‘பேஸ்புக்’கில் அமெரிக்காவை சேர்ந்தவர் என கூறிக்கொண்டு ஒருவர் அறிமுகம் ஆனார். வங்கி பெண் ஊழியர் அவரிடம் நட்பாக பழகி வந்தார். ஒருநாள் அந்த நபர் வங்கி பெண் ஊழியருக்கு அமெரிக்காவில் இருந்து செல்போன், மடிக்கணினி, வாசனை திரவியங்கள் போன்ற பொருட்களை அனுப்பி வைப்பதாக கூறினார்.

இதை நம்பிய வங்கி பெண் ஊழியர் அந்த நபருக்கு தனது வீட்டின் முகவரியை கொடுத்தார்.

ரூ.17½ லட்சம் மோசடி

இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் வங்கி பெண் ஊழியருக்கு செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது. அப்போது, எதிர்முனையில் பேசிய பெண் ஒருவர், டெல்லி விமானநிலைய சுங்கப்பிரிவில் இருந்து பேசுவதாக தெரிவித்தார். பின்னர் அவர், வங்கி பெண் ஊழியருக்கு வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் அதிகளவு அமெரிக்க டாலர்கள் வந்து இருப்பதாகவும், அதற்கு சுங்க வரி செலுத்தவில்லையென்றால் கைது செய்து விடுவோம் என மிரட்டினார்.

இதனால் பயந்து போன வங்கி பெண் ஊழியர் அந்த பெண் கூறிய 9 வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக ரூ.17½ லட்சம் வரை அனுப்பி உள்ளார்.

வலைவீச்சு

இந்தநிலையில் வங்கி பெண் ஊழியர் கடந்த சில நாட்களுக்கு முன் தனக்கு நடந்த அவலத்தை மகனிடம் கூறினார். அப்போது தான் அவருக்கு கும்பல் ‘பேஸ்புக்’கில் பழகி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story