ரியல் எஸ்டேட் ஏஜெண்டிடம் ரூ.4½ லட்சம் பறித்த 5 பேர் கைது டெல்லியில் சிக்கினர்
ரியல் எஸ்டேட் ஏஜெண்டிடம் ரூ.4½ லட்சம் பறித்த 5 பேர் கொண்ட கும்பலை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
ரியல் எஸ்டேட் ஏஜெண்டிடம் ரூ.4½ லட்சம் பறித்த 5 பேர் கொண்ட கும்பலை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
பணப்பை பறிப்பு
மும்பையை சேர்ந்தவர் சேத்தன். ரியல் எஸ்டேட் ஏஜெண்டு. இவர் அண்மையில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்துடன் மஜீத் பந்தர் ரெயில் நிலையம் அருகே உள்ள நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென அவரின் பணப்பையை பறித்துக்ெகாண்டு தப்பிஓடினார்.
இதனை கண்ட சேத்தன் அதிர்ச்சி அடைந்து பணப்பையை பிடுங்கி சென்றவரை பிடிக்க விரட்டிச்சென்றார். ஆனால் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
5 பேர் கைது
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், பணப்பையுடன் தப்பிச்சென்ற வாலிபர் நாலச்சோப்ராவை சேர்ந்த பப்லு இஸ்மாயில்(35) என்பது தெரியவந்தது. அவருடன் இந்த சம்பவத்தில் மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.
இந்தநிலையில், அவர்கள் டெல்லியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் டெல்லி சென்று உள்ளூர் போலீசாரின் உதவியுடன் அங்குள்ள ஓட்டலில் பதுங்கி இருந்த பப்லு இஸ்மாயில் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் விசாரணைக்காக அவர்கள் மும்பை கொண்டு வரப்பட்டனர்.
Related Tags :
Next Story