விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியையொட்டி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் கலை பண்பாட்டுத்துறை நடத்திய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 11 கோடியே 50 லட்சம் விருதுகளும், பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே, மாணவ, மாணவிகள் உடல் நலன், மன நலமுடன் வாழ ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் விளையாட்டிற்கு என ஒதுக்கி உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக நடந்த கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவிகளுக்கு சான்றிதழ், கலை பண்பாட்டுத்துறை சார்பாக நடைபெற்ற கிராமிய நடனம், பரத நாட்டியம், தமிழிசை பாடல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசாக ரூ. 30 ஆயிரத்திற்கான காசோலை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 12 மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பர்கூர் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தர்மபுரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் தென்னரசு, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், அரசு மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, ஓய்வுபெற்ற தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கோவிந்தராசு, அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் உத்திரகுமாரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், கல்லூரியின் துணை முதல்வர் கீதா நன்றி கூறினார்.

Related Tags :
Next Story