அகில இந்திய போட்டி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள உதவும்
புதிய பாடத்திட்டம் அகில இந்திய அளவிலான போட்டி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள உதவும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் தர்மபுரியில் கூறினார்.
தர்மபுரி,
பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய பாடத்திட்டத்தின்படி 1-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 பாட புத்தகங்கள் குறித்து கருத்தாய்வு கூட்டம் தர்மபுரி விஜய் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி வரவேற்றார்.
கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் கலந்து கொண்டு புதிய பாடத்திட்டத்தின்படி கல்வி கற்பிப்பதில் செய்யப்பட்டுள்ள நவீன மாற்றங்கள் குறித்தும், கற்றலை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆசிரிய, ஆசிரியைகளிடம் கருத்துக்களை கேட்டறிந்து உரையாடினார். புதிய பாடத்திட்டத்தின் சிறப்புகள் குறித்தும் விளக்கி பேசினார். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், புதிய பாடத்திட்டத்தின்படி மாணவ-மாணவிகளுக்கு எவ்வாறு எளிய முறையில் புரியும் வகையில் பாடங்களை கற்பிக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் தரம் உயரும். நீட் உள்ளிட்ட அகில இந்திய அளவிலான போட்டித்தேர்வுகளை மாணவ-மாணவிகள் எளிதில் எதிர்கொள்ள உதவும் வகையில் புதிய பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Related Tags :
Next Story