பொது சேவைக்காக மல்லிகார்ஜுன கார்கே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து உள்ளார் துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் பேச்சு


பொது சேவைக்காக மல்லிகார்ஜுன கார்கே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து உள்ளார் துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் பேச்சு
x
தினத்தந்தி 20 July 2018 11:00 PM GMT (Updated: 20 July 2018 6:36 PM GMT)

பொது சேவைக்காக மல்லிகார்ஜுன கார்கே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து உள்ளதாக துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு, 

பொது சேவைக்காக மல்லிகார்ஜுன கார்கே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து உள்ளதாக துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

சமஅளவில் சேவை

நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அரசியல் பயணம் குறித்த நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் கலந்து கொண்டு, பேசியதாவது:–

மல்லிகார்ஜுன கார்கே ஒரு சிறந்த வித்தியாசமான தலைவர். அவரை ஆதிதிராவிடர் சமூக தலைவர் என்று நான் சொல்ல மாட்டேன். அவர் அனைத்து சமூகங்களுக்கும் சம அளவில் சேவையாற்றி இருக்கிறார். அதிலும் அடிமட்டத்தில் உள்ள சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் தனது வாழ்க்கையை பொது சேவைக்காக அர்ப்பணித்துள்ளார். அவர் எனக்கு மூத்த சகோதரர். அவர் எனக்கு வழிகாட்டி.

11 முறை வெற்றி பெற்று...

நான் மாணவராக இருந்தபோதே மல்லிகார்ஜுன கார்கே மந்திரியாக பணியாற்றினார். அரசியல் கொள்கை, கோட்பாடுகளுக்கு ஏற்றபடி அவர் செயல்படுகிறார். அம்பேத்கர் கொள்கையின்படி நடந்து கொள்பவர். அவர் கல்வித்துறை மந்திரியாக இருந்தபோது, ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களும் கல்வி நிறுவனங்களை தொடங்கும் வகையில் சட்டத்தை இயற்றினார். நிதி உதவியும் வழங்கினார். ஒரே தொகுதியில் 11 முறை வெற்றி பெற்று சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அவருடைய சாதனை. அவர் பல்வேறு இலாகாக்களின் மந்திரியாகவும் பணியாற்றினார்.

இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.


Next Story