தமிழகத்தில் முதல் முறையாக ராமநாதபுரம் மாவட்ட சிறை கைதிகளுக்கு ஆதார் கார்டு


தமிழகத்தில் முதல் முறையாக ராமநாதபுரம் மாவட்ட சிறை கைதிகளுக்கு ஆதார் கார்டு
x
தினத்தந்தி 21 July 2018 4:00 AM IST (Updated: 21 July 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் முதல்முறையாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிறைகைதிகளுக்கு ஆதார்கார்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட சிறைத்துறை, அரசு கேபிள் டி.வி.நிறுவனம் ஆகியவை இணைந்து மாவட்ட சிறையில் உள்ள சிறை கைதிகளுக்கு ஆதார் கார்டு வழங்கும் சிறப்பு முகாம் சிறை வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்ட நீதிபதி கயல்விழி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சப்–கோர்ட்டு நீதிபதி ராமலிங்கம் முன்னிலை வகித்தார். அரசு கேபிள்டி.வி. துணை தாசில்தார் செய்யது முகம்மது, மாவட்ட சிறை கண்காணிப்பாளர் பிரபாகரன், சிறை சட்ட உதவி வக்கீல்கள் இளமாறன், ஜெயசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முகாமில் சிறையில் இருந்த சுமார் 20 கைதிகளுக்கு அவர்கள் வைத்திருந்த ஆவணங்களின் அடிப்படையில் ஆதார் கார்டு பெறுவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கண்கருவிழி, கைரேகை போன்றவை பதிவு செய்யப்பட்டது. இந்த பதிவிற்கான ரசீது வழங்கப்பட்டது.

இதன்மூலம் ஆதார்கார்டு உரிய பரிசீலனைக்கு பின்னர் அரசால் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு வழங்கப்படும். நிகழ்ச்சியில், கைதிகளுக்கு பதிவு செய்யப்பட்ட ஆதார் கார்டு விண்ணப்ப ரசீதை மாவட்ட நீதிபதி கயல்விழி வழங்கினார். அனைத்து அத்தியாவசிய பணிகளுக்கும் ஆதார்கார்டு அவசியமாகிவரும் நிலையில் தமிழகத்தில் முதன் முறையாக சிறை கைதிகளுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் ஆதார்கார்டு விண்ணப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story