தூத்துக்குடியில் தொழில்கள் தொடங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடியில் தொழில்கள் தொடங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 21 July 2018 3:30 AM IST (Updated: 21 July 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்ட தொழில் களை தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி, 

முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்ட தொழில் களை தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஒத்துழைப்பு

தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த தொழில்களை தொடங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கும். உடன்குடியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின்நிலையம் அமைக் கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன பொருட்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இதுவரை கந்தக அமிலம் 7 ஆயிரம் டன், பாஸ்பாரிக் அமிலம் 600 டன், ஜிப்சம் 25 ஆயிரம் டன், ராக் பாஸ்பேட் 8 ஆயிரம் டன், சிலிசிக் அமிலம் 60 டன் அகற்றப்பட்டு உள்ளது. திரவ ஆக்சிஜன் உள்ளிட்ட குறைந்த அளவு ரசாயனங்கள் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளன. 4 முதல் 5 நாட்களுக்குள் இந்த ரசாயன பொருட்களை அப்புறப்படுத்தும் பணி முடிக்கப்படும். ஜிப்சம், தாமிரதாது ஆகியவற்றை முழுமையாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 30 நாட்களுக்குள் பணிகள் முடிக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Next Story