பள்ளி- கல்லூரிகளில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேச்சு போட்டி


பள்ளி- கல்லூரிகளில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேச்சு போட்டி
x
தினத்தந்தி 21 July 2018 3:30 AM IST (Updated: 21 July 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி பள்ளி- கல்லூரிகளில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேச்சு போட்டி நடத்தப்பட்டது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி பள்ளி- கல்லூரிகளில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேச்சு போட்டி நடத்தப்பட்டது.

விழிப்புணர்வு போட்டி

தூத்துக்குடி மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேச்சு போட்டி, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காகவும், கல்லூரி மாணவர்களுக்காகவும் நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கான போட்டி தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலும் நடந்தது. இதில் மாநகராட்சி பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். சி.வ. அரசு பள்ளியில் நடந்த போட்டிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் தலைமை தாங்கிபேசினார்.

பரிசுகள்

இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, விரைவில் நடக்க உள்ள உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கின் போது பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்த பேச்சு போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் முருகன், முதன்மை கல்வி அலுவலக சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பென்சர், காமராஜ் கல்லூரி இணை பேராசிரியர் சிவபாக்கியம், பேராசிரியர் முரளி, நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் தேவராஜ் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

Next Story