இளம்பெண்ணை கேலி செய்ததை தட்டிக்கேட்டவர் கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை


இளம்பெண்ணை கேலி செய்ததை தட்டிக்கேட்டவர் கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 21 July 2018 3:45 AM IST (Updated: 21 July 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை கேலி செய்ததை தட்டிக்கேட்டவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சென்னை, 

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் என்ற செந்தில்குமார் (வயது 32). கடந்த 2009-ம் ஆண்டு இவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை அடிக்கடி கேலி செய்துள்ளார். இதை அந்த பகுதியில் வசித்து வந்த ரமா என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், வீட்டில் தனியாக இருந்த ரமாவை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் எம்.செல்வராஜ் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.என்.செந்தில்குமார், குற்றவாளி செந்தில்குமாருக்கு ஆயுள்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 

Next Story