1½ மாத குழந்தையின் இடுப்பு எழும்பில் சிக்கியிருந்த ஊசி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்


1½ மாத குழந்தையின் இடுப்பு எழும்பில் சிக்கியிருந்த ஊசி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
x
தினத்தந்தி 21 July 2018 5:15 AM IST (Updated: 21 July 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

1½ மாத குழந்தையின் இடுப்பு எழும்பில் சிக்கியிருந்த ஊசி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

மும்பை, 

1½ மாத குழந்தையின் இடுப்பு எழும்பில் சிக்கியிருந்த ஊசி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

குழந்தை உடலில் ஊசி

மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ஆஸ்தா. ஆஸ்தாவிற்கு கடந்த மாதம் 7ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் அந்த குழந்தைக்கு காய்ச்சல் வந்தது. மேலும் குழந்தையின் தொடை பகுதி வீங்கி இருந்தது.

உடனடியாக பெற்றோர் குழந்தையை பரேலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் நடத்திய சோதனையில் குழந்தையின் இடுப்பு எழும்பில் 2 செ.மீ. நீளமுள்ள ஊசி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

ஊசி அகற்றம்

இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் இடுப்பு எழும்பில் சிக்கி இருந்த ஊசியை அகற்றினர். இது குறித்து குழந்தையின் தந்தை கூறியதாவது:

குழந்தையின் இடுப்பு எலும்பில் ஊசி குத்திக்கொண்டு இருப்பதாக டாக்டர்கள் கூறியபோது அதிர்ச்சி அடைந்தோம். இதற்கு முன் குழந்தைக்கு சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரியில் டாக்டரின் கவனக்குறைவால் ஊசி அவனது உடலுக்குள் சென்று இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story