படவேட்டில் அனுமதியின்றி காளை விடும் திருவிழா நடத்த முயற்சி: போலீசார் தடை


படவேட்டில் அனுமதியின்றி காளை விடும் திருவிழா நடத்த முயற்சி: போலீசார் தடை
x
தினத்தந்தி 21 July 2018 4:45 AM IST (Updated: 21 July 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

படவேட்டில் அனுமதியின்றி காளை விடும் திருவிழா நடத்த முயற்சியை போலீசார் தடை செய்தனர்.

கண்ணமங்கலம், 

கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ஊராட்சியில் ராமர் கோவில் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், இளைஞர்கள் நேற்று போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அனுமதியின்றி காளைவிடும் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இது சம்பந்தமாக ‘வாட்ஸ் அப்’ குழு அமைத்து காளை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஏராளமான காளைகளுடன் அதன் உரிமையாளர்கள் ராமர் கோவில் பகுதியில் திரண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போளூர் தாசில்தார் தியாகராஜன், சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் அருள், படவேடு கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் மற்றும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காளை விடும் திருவிழாவிற்கு தடை விதித்தனர். அத்துடன் போலீசார் காளைவிடும் திருவிழாவுக்கு வைக்கப்பட்ட மைக் செட், ஒலிபெருக்கி மற்றும் வெளியூரில் இருந்து காளைகளை கொண்டு வந்த லோடு வேன்களை பறிமுதல் செய்தனர்.

அந்த சமயத்தில் படவேடு ராமர் கோவிலுக்கு வெளியே கட்டி வைத்திருந்த யானை லட்சுமி திடீரென மிரண்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து யானையை, பாகன்கள் சமரசம் செய்த பின் நிலைமை சீரானது.

Next Story