ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை சார்பில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள் அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார்


ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை சார்பில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள் அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 22 July 2018 3:00 AM IST (Updated: 22 July 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடங்களை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில் மண்டபம் யூனியன் பட்டணம்காத்தான் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பிலும், தங்கச்சிமடம் ஊராட்சியில் ரூ.31லட்சத்து30 ஆயிரம் மதிப்பிலும், திருப்புல்லாணி யூனியன் ரெகுநாதபுரம் ஊராட்சியில் ரூ.31லட்சத்து30 ஆயிரம் மதிப்பிலும், ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் திருப்பாலைக்குடி ஊராட்சியில் ரூ.30லட்சத்து70 ஆயிரம்மதிப்பிலும், ராமநாதபுரம் யூனியன் தேவிபட்டினம் ஊராட்சியில் ரூ.30 லட்சம், கடலாடி யூனியன் ஏர்வாடி ஊராட்சியில் 31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், பரமக்குடி யூனியன் தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சியில் ரூ.31 லட்சம் மதிப்பிலும், கமுதி யூனியன் பேரையூர் ஊராட்சியில் ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும் என 7 யூனியன்களில் புதிதாக அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டுஉள்ளன.

இந்த அம்மா பூங்காக்கள் மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடங்களை பட்டணம்காத்தான் ஊராட்சியில் உள்ள அம்மா பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மணிகண்டன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உச்சிப்புளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.15 லட்சம் மதிப்பிலும், இருமேனி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.6 லட்சம் மதிப்பிலும் பள்ளி மாணவ–மாணவிகளின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள பள்ளி வளாக சுற்றுச்சுவர்களை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லீமா அமாலினி, செயற்பொறியாளர் சிவராணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story