மசினகுடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தைப்புலி 2 ஆடுகளை அடித்துக்கொன்றது
மசினகுடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தைப்புலி 2 ஆடுகளை அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
மசினகுடி,
மசினகுடி அருகே உள்ள ஆச்சக்கரை பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கூலி வேலை, கால்நடை வளர்ப்பு, விவசாயம் போன்ற தொழில்களை இந்த மக்கள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஆச்சக்கரையை ஒட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து சிறுத்தைப்புலி ஒன்று அடிக்கடி குடியிருப்பு பகுதிக்கு வந்து பொதுமக்கள் வளர்த்து வரும் கால்நடைகளை அடித்து கொன்று வருகிறது. குறிப்பாக தெரு நாய்களை அடித்து கொன்று தூக்கி செல்லும் அந்த சிறுத்தைப்புலி நேற்று அதிகாலை ராமன் என்பவரது வீட்டின் அருகில் வந்துள்ளது. பின்னர் அவரது கால்நடை கொட்டகையில் கட்டி வைக்கபட்டிருந்த 12 ஆடுகளில் 2 ஆடுகளை அடித்து கொன்றது. சிறுத்தைப்புலி ஆட்டை அடித்து கொன்றதை கண்ட அங்கிருந்த மாடுகளும் மற்ற ஆடுகளும் அச்சத்தில் கத்தின.
இந்த சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியில் வந்த ராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறுத்தைப்புலி ஆடுகளை அடித்து கொன்று தூக்கி செல்ல முயன்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக சிறுத்தைப்புலியை விரட்டினர். ராமன் மற்றும் அவரது குடும்பத்தினரை கண்ட அந்த சிறுத்தைப்புலி ஆடுகளை அதே இடத்தில் விட்டு விட்டு வனப்பகுதிக்குள் ஓடியது. இந்த சம்பவம் மசினகுடி பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே ஆச்சக்கரை பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ந்து வந்து கால்நடைகளை தாக்கி கொன்று வரும் சிறுத்தைப்புலியை உடனடியாக வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும். சிறுத்தைப்புலி கொன்ற 2 ஆடுகளின் உரிமையாளர் ராமனுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story