தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் ரூ.499 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் ரூ.499 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராமன் கூறினார்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் டாம்கோ, டாப்செட்கோ, கூட்டுறவு வங்கி மற்றும் முன்னோடி வங்கிகள் சார்பில் தொழில் மற்றும் கல்விக்கடன் வழங்கும் முகாம் நேற்று நடந்தது. கூட்டுறவு இணைபதிவாளர் ராஜ்குமார், மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் நல மாவட்ட அலுவலர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார்.
முகாமிற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி, 20 மாணவ-மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 72 லட்சத்துக்கான கல்விக்கடன் உத்தரவுகளை வழங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளின் கல்வி தடைபடாமல் இருப்பதற்காக கல்விக்கடன் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் டாம்கோ, டான்செட்கோ ஆகியவற்றின் மூலம் இந்தாண்டு தலா ரூ.3 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் கல்விக்கடன் மற்றும் இதர கடன்களை பெறுவதில்லை.
அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்விக்கடன், தொழிற்கடன் முகாம் நடத்தப்படுகிறது. அனைவரும் இணைந்து செயல்பட்டால் தான் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியும். ஒரு கை தட்டினால் ஓசை வராது, இரு கைகளையும் தட்டினால் தான் ஓசை வரும். அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டால் எதையும் செயல்படுத்த முடியும்.
கல்வி மற்றும் தொழிற்கடன்களை டாம்கோ, டான்செட்கோ, கூட்டுறவு வங்கி ஆகியவை வழங்கி வருகின்றன. மகளிர் குழுக்கள் அதிகளவு தொழிற்கடன் பெற்றுள்ளன. மற்ற மாவட்டங்களை விட வேலூர் மாவட்டத்தில் கல்வி மற்றும் தொழிற்கடன் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் ரூ.499 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.16 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கிகள் மூலம் அதிகளவு கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று மாவட்டத்தில் மேலும் 2 அல்லது 3 இடங்களில் முகாம் நடத்தப்பட உள்ளது. அதனை அந்தந்த பகுதி மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
வேலூரை சேர்ந்த நவீத் அகமது என்ற மாணவர் கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்துவிட்டு, இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் டாக்டருக்கு படிக்க இடம் கிடைத்துள்ளது. நவீத் அகமது கூட்டுறவு வங்கியில் கல்விக்கடன் விண்ணப்பித்தார். அவருக்கு கூட்டுறவு வங்கி மூலம் இந்த முகாமில் கல்விக்கடனுக்கான உத்தரவு வழங்கப்பட்டது. மாணவருக்கு உடனடியாக கல்விக்கடன் அளிக்க ஏற்பாடு செய்த கூட்டுறவு அதிகாரிகளுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுந்தர்ராஜ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உதவி பொது மேலாளர் மாதையன், கனரா வங்கி முதன்மை மேலாளர் அனில்குமார், முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன் ஆகியோர் வங்கிகள் மூலம் கல்வி மற்றும் தொழிற்கடன்வழங்குவது குறித்து பேசினார்கள்.
இதில், மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கல்விக்கடன் கேட்டு பெற்றோருடன் வந்திருந்தனர்.

Related Tags :
Next Story